Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஸ்டாலின் இல்ல…! நான் பார்க்குறது கலைஞரை… முதல்வர் முன்பாக துரை முருகன்அதிரடி..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே உட்கார்ந்து இருப்பது மதிப்புக்குரிய முக.ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல.  இங்கே நாம் காண்பது என தலைவருடைய முகம்தான். முதலமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சமா ? எனவே முதல்வர் இருக்க பயமேன்.

சென்ற ஆண்டு நான் வாக்கு கொடுத்தேன். 149 அணைகளை  இந்த ஆண்டு கட்டுவோம் என்று…. ஆனால் ஒரு ஆறு மாத காலம் நம்மால் எதிலுமே இயங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் நான் நிறைவேற்றாவிட்டால்,  என் நெஞ்சில் அந்த சபதம் இருக்கிறது.

நாங்க இப்பதான் வந்திருக்கின்றோம். ஒரு வருடம்தான் ஆயிற்று. அதுல பாதி நாள் கொரோனாவால் போச்சு,  பாதி நாள் வெள்ளத்தில் போச்சு, பாதி நாள் இப்படி போச்சு. ஆகையினால் இனிமே பாருங்க என தெரிவித்தார்.

Categories

Tech |