Categories
மாநில செய்திகள்

இது 10 மாதக் குழந்தையிடம் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்பது போல் இருக்கு…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 3-வது நாளாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது 10 மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த 10 மாத குழந்தை பத்தாம் வகுப்பில் மட்டுமல்ல பட்டப்படிப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் என்று அவர் பேசினார்.

Categories

Tech |