நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள cowin.gov.in என்ற தளத்திலோ அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாக முன் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவின் ஆப் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தேதி போன்ற விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.