Categories
தேசிய செய்திகள்

இது 7வது முறை… பெருமையை பெறுகிறார் நிதிஷ்குமார்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

பீகாரின் முதல் மந்திரியாக 7வது முறை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்கிறார். அவர் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். ஆனாலும் 7 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறை 2005 நவம்பர் 24 ஆம் தேதி பதவி ஏற்றார்.

அப்போது ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தார். மூன்றாவது முறை 2010 நவம்பர் 26 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்தார். இதனை அடுத்து நான்காவது முறை 2015 பிப்ரவரி 22 தேதி பதவியேற்று அதே வருடம் நவம்பர் 19 வரையில் பதவி வகித்தார். ஐந்தாவது முறை அதே வருடம் நவம்பர் 20 பதவியேற்ற ஜூலை 26 வரை பதவியில் இருந்தார். ஆறாவது முறை 2017 ஜூலை 26 பதவியேற்று தற்போது வரை பதவியில் உள்ளார். இந்த நிலையில் ஏழாவது முறையாக முதல்-மந்திரி பதவியை அவர் ஏற்க உள்ளார்.

Categories

Tech |