Categories
அரசியல் மாநில செய்திகள்

இது 8கோடி பேரின் உணர்வு…! ஒற்றுமையா போராடுவோம்… என்ன செய்யலாம் சொல்லுங்க ? ஆலோசனை கேட்கும் ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  ஆளுநர், நீட்தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறார். ஆனால் நீட் விலக்கு சட்ட முன்வடிவு  நம் சட்டமன்றத்தினுடைய  8கோடி உணர்வுகளை வெளிப்படுத்தும். தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் தொடர்புடையது.  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறையாண்மை தொடர்பானது.

அந்தச் தீர்ப்பு வேறு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலை கோருகின்றோம். குடியரசு தலைவர் முடிவெடுக்கும் முன்பே, ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பி வைக்கிறார். ஆகவேதான் இந்த அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க, நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூக நீதி போராட்டத்தை நடத்திட வேண்டும் என்று உங்களை எல்லாம் நாங்கள் அழைத்து இருக்கின்றோம்.

அடுத்த கட்டமாக நாம என்ன செய்யணும் ? என்பதற்கான ஆலோசனைகளை நீங்கள் அனைவரும் வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இங்கே ஒரு வரைவுத் தீர்மானத்தை படிக்க வைக்கின்றார். அதன் மீது தாங்கள் அனைவரும் கருத்துக்கு எடுத்துரைத்து, நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டுமென்று என் உரையை நிறைவு செய்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |