தமிழகத்தில் அதிமுக அரசின் சாதனைகளை, தங்கள் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமானது, கடந்த அம்மா அரசின் ஆட்சியிலேயே போடப்பட்டுள்ளது.
ஆனால் திமுக அரசு வழக்கம் போல் இந்த திட்டத்தையும், தங்கள் சாதனை போல காட்டிக் கொள்ள முயல்கிறது. இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் என பழனிசாமி கூறியுள்ளார். மேலும் இது #Make in Tamilnadu தான், ஆனால் #Madeby Amma Arasu என தெரிவித்துள்ளார்.