சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுடைய திருமணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் இருவரும் தங்களுடைய திருமணம் குறித்து பரவிய வதந்தியானா தகவல்களுக்கு பேட்டிகளில் கலந்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றுள்ளனர்.
இதற்கான ப்ரோமோ இணையத்தில் பரவி வருகிறது. இதில் ரவீந்தர மகாலட்சுமியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி ப்ரபோஸ் செய்கிறார். இதேபோல மகாலட்சுமிக்காக தான் வைத்திருந்த கவிதைகளையும் கூறுகிறார். இருவரும் ஜாலியாக சுவாரசியமாக நிறைய பேசியுள்ளனர். இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்புள்ஸ் என்று கூறி வெளியான இந்த ப்ரோமோ வந்தால் மகாலட்சுமி என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி இன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.