ராணிப்பேட்டையில் தனியார் மற்றும் அரசு மதுபானத்திற்கன கூடங்கள் இயங்கக் கூடாது என்று மாவட்டத்தின் வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநிலத்தின் வாணிபக் கழகம் கீழ் சில்லரை மதுபான கடை இயங்கிவருகிறது. இதன் அருகிலிருக்கும் தனியார் மதுபான மற்றும் அரசு மதுபானக் கூடங்கள் மறு உத்தரவை பிறப்பிக்கும் வரை இயங்கக் கூடாது என்று மாவட்டத்தின் வருவாய் அலுவலரான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.