Categories
அரசியல்

“இதெல்லாம் இவங்க மட்டும் தா செய்வாங்க”…. இது ஒரு பயங்கரவாதம்…. எரிமலையாக வெடித்த சீமான்…!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மிரட்டல் விடுத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் சிறுவர்கள் இருவர், மன்னர் மற்றும் அமைச்சர் வேடமிட்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இது தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி குறித்து பேசுவது போல் இருந்தது. இதனால் ஜீ தமிழ் டிவி மீது அடக்குமுறைகள் திணிக்கப்படுவதாக நாம் தமிழர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஒரு பிரபலமான ஊடகம் பாஜக அரசால் அச்சுறுத்த படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அந்த தொலைக்காட்சியின் மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவி விட்ட பாஜக அரசை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் கொல்லப்படுவது, இந்த கொடுங்கோல் பாஜக ஆட்சியில் தான் நடைபெறுகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி நேரடியாக வஞ்சிக்கப்படுவதும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் பாஜக ஆட்சியில்தான் நடைபெறும். 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சர்வாதிகாரம் தலை தூக்கி நிற்கிறது. இங்கு ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை, ஜனநாயகம் கேள்விக்குறியாக பட்டுவிட்டது. இதனை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள், சகித்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சி மீது அடக்குமுறையை ஏவி விட்ட பாஜக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,.!” இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Categories

Tech |