Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு ஷோ… பாத்ரூம் கழுவ நா போகமாட்டேன்… பிக் பாஸை விமர்சித்த லெட்சுமி மேனன்… கோபத்தில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை லட்சுமிமேனன் கூறியிருக்கும் கருத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு எழுப்பியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் கும்கி படம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து லட்சுமி மேனனுக்கும் பல விருதுகள் கிடைத்தன. தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 தொடர்பான பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் லட்சுமிமேனன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக சில தகவல்கள் வெளியானது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி மேனன் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அடுத்தவர்களின் எச்சில் தட்டை கழுவவோ அடுத்தவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவவோ என்னால் முடியாது.

அதோடு நிகழ்ச்சியில் கேமரா முன்னால் என்னால் சண்டை போடவும் முடியாது. குப்பை நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போகின்றேன் என்று யாரும் என்னிடம் கேட்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இந்த கருத்து பல ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதும் பங்கேற்காததும் அவரவர் விருப்பம். அதனை எப்படிச் சொல்லவேண்டும் என்று ஒருமுறை இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |