Categories
அரசியல்

இதெல்லாம் சும்மா….! மீசை வைத்தால் கட்டபொம்மனா…? கடுப்பாகிய ஜெயக்குமார்…!!!

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலா சென்னை டி.நகர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக கொடியுடன் உள்ள காரில் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அதிமுக கொடியை ஏற்றி அதிமுக பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா எந்தவித உரிமையிலும் தன்னை கழக பொதுச்செயலாளர் என்று சட்டப்படி வைத்து கொள்ள முடியாது. இது தேர்தல் ஆணையத்துக்கு எதிரானது. மீசை வைத்தவர்கள் கட்டபொம்மன் ஆகிவிட முடியுமா? கல்வெட்டில் பெயர் போட்டால் கழக பொதுச்செயலாளர் ஆகி விடுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |