Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்வதற்கு அனுமதி இல்லை…. தீவிரமான பாதுகாப்பு…. மாவட்ட சூப்பிரண்டு அறிக்கை….!!

வெற்றி பெற்றவர்கள்  வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நான்கு இடங்களில் எனப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம்- ஒழுங்கு போலீசார் என மூன்று அடுக்குகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள்  தங்களது செல்போன், புகையிலை பொருட்கள், மதுபாட்டில் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டருக்கு வேட்பாளர் மற்றும் முகவரி வாகனங்கள் உள்ளே வர அனுமதிக்கப்படாது. இதனையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெடி வெடிப்பது, வெற்றி ஊர்வலம் கொண்டாடுவது போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

இந்தப் பணியில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 9 துணை போலீஸ் சூப்பிரண்ட், 44 இன்ஸ்பெக்டர், 250 சப்-இன்ஸ்பெக்டர், 1800 போலீசார் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |