Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சொன்னா நம்பலாமா..? 1 1/4 கோடி ரூபாய் மோசடி… ஆசிரியர் பரபரப்பு புகார்..!!

தேனி மாவட்டத்தில் ஆசிரியரின் மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆசிரியர் பயிற்றுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோடாங்கிபட்டியில் வசித்து வரும் சுந்தர் என்பவரும், கருப்பசாமியும் நண்பர்கள். சுந்தர் ஆசிரியர் பயிற்றுனராக வட்டார வளமையத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் நண்பர்கள் என்பதால் அதன் அடிப்படையில் அரசு பள்ளியில் கருப்பசாமி மனைவி பிரியாவிற்கு வேலை வாங்கி தருவதாக சுந்தர் கூறியுள்ளார். அதை நம்பிய கருப்பசாமி 2019-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதற்காக ரூ.70 லட்சத்தை சுந்தரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் வேலைக்கான பணி உத்தரவு விரைவில் வந்துவிடும் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் தனது ஊரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப் போவதாக சுந்தர் கூறியுள்ளார். மேலும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கருப்பசாமி மேலும் ரூ. 50 லட்சத்தை சக ஆசிரியைகள் 3 பேரிடம் இருந்து கடனாக வாங்கி சுந்தரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திரும்பி தராமலும், வேலை வாங்கித் தராமலும் காலம் தாழ்த்தியுள்ளார். இதுகுறித்து கருப்பசாமி சுந்தரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் காதணி விழா நடத்தி அதில் வரும் மொய் பணத்தில் பணத்தை தந்து விடுவதாக உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் விழா முடிந்த பின்பும் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்தது குறித்து காவல்துறையினர் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள சுந்தரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |