Categories
அரசியல்

இதெல்லாம் தேவையா?…. வசமாக சிக்கிய பாமக எம்எல்ஏ…. வார்னிங் கொடுத்த நீதிபதி….!!!!

சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரும்வரை பணி நியமனமோ அல்லது புதிதாக மாணவர் சேர்க்கையோ 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறக் கூடாது என்று கூறியது. மேலும் வழக்கை பிப்ரவரி 15 மற்றும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரி தமிழகத்தில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையானது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைபெற கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் வருகின்ற 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஏன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தீர்கள் ? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய போவதாக பாமக முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரியை எச்சரித்தார். இதையடுத்து மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதனை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |