நடிகை பிரியா பிரின்ஸ் சின்னத் திரையில் நியூஸ் ரீடர், ஆங்கர் என பல்வேறு பரிமாணங்களில் பிரபலமானவர். இப்போது இவர் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு பெண்கள், ஆண்கள் என பல தரப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் கண்ணானே கண்ணே சீரியலில் வில்லியாக நடிப்பில் அசத்திவருகிறார். இந்த நிலையில் தன் வீட்டை சுற்றிக்காட்டி ஹோம்டூர் வீடியோ ஒன்றை பிரியா பிரின்ஸ் அண்மையில் பதிவிட்டிருந்தார்.
அப்போது தன் வீட்டிற்குள்ளேயே சிறு பார் செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து இருப்பதை அவர் பெருமையாக கூறுகிறார். இதை பார்த்து கடுப்பான சில பேர் “இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவைதானா..? அப்படியே தனி நபர் சுதந்திரம்னாலும் ஒரு பொறுப்பான மீடியா இன்ப்ளூயன்சருக்கு பொதுவெளியில எதனை காட்டனும் காட்டக்கூடாதுன்னு அறிவு வேண்டாமா?” என்று பிரியா பிரின்சை வாட்டி எடுத்து வருகின்றனர்.