Categories
சினிமா மாநில செய்திகள்

இதெல்லாம் பொய்…. யாரும் நம்பாதீங்க…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா….!!!!

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சமந்தா திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இடைவிடாது தமிழ், தெலுங்கு என வெற்றிப் படங்களை திருமணத்திற்கு பிறகும் கொடுத்து வந்தார். இதற்கிடையில இணையதளங்களில் நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களது விவாகரத்து முடிவை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

சமந்தா தான் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி என்று நாகசைதன்யா சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். இதற்குப் பிறகு சமந்தா வெளியிட்ட விவாகரத்து குறித்த பதிவை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கி விட்டார். இந்நிலையில் நாகர்ஜுனா விவாகரத்து முடிவை சமந்தா தான் முதலில் எடுத்ததாகவும் அதன் பிறகு தனது மகன் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறியதாக தகவல் வெளிவந்த நிலையில், இதை நாகர்ஜுனா போலியான செய்தி என்று விளக்கமளித்து, சமூக வலைத்தளங்கள் வெளியிட்டுள்ளார். மேலும், மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, முற்றிலும் முட்டாள்தனமாவை என்றும், சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய தனது அறிக்கையை மேற்கோளிட்டு காட்டி கூறியுள்ளார். இம்மாதிரியான செய்திகளை  வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |