Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பொய் யாரும் நம்பாதீங்க…? “தீபாவளி அன்னைக்கு நிறைய பட்டாசு வெடிங்க”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பேச்சு…!!!!!

தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது.

இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்தது என்று கேட்டால் பதில் இல்லை. மேலும் திமுகவினர் நடத்தும் எந்தெந்த பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பதை வரும் 27ஆம் தேதி சொல்வோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஏன் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா மரண விவகாரத்தில் ராதாகிருஷ்ணன் மீது அரசியல் பார்வை கூடாது அப்படி செய்தால் யாரும் தைரியமாக பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |