Categories
அரசியல்

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. இளையராஜாவை அவமதிப்பதா?…. ஜே.பி.நட்டா கடும் கண்டனம்….!!!!

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது அறிக்கையில், “இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிப்பதா? உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இதுதான் ஜனநாயகமா? பாஜகவினர் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை கூறினால் அதனை எதிர்ப்பீர்களா? ஆதரவாக பேசவில்லை என்பதற்காக அவரை பற்றி விமர்சனம் செய்வது தவறான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |