முதலமைச்சர் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நகர தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடினவயல் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார்.
அவர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.