மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரகாரம் பகுதியானா குழுமணி வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரது வீட்டிற்கு முன் சென்ற மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பின் அங்கு மேஜையில் வைக்கபட்டிருந்த 2 பவுன் தங்க மோதிரத்தை அவர்கள் திருடியுள்ளனர்.
இந்நிலையில் மர்ம நபர்களின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி எழுந்து பார்த்த போது அவர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மூதாட்டி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.