Categories
சினிமா தமிழ் சினிமா

இதே கேள்வியை நடிகர்களிடம் கேட்பிங்களா…? ஷ்ரத்தா ஆதங்கம்.

நடிகர்களிடம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்ற கேள்வி ஏன் கேட்கப்படுவதில்லை என நடிகை ஷ்ரத்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார்

இயக்குனர் பவன் குமார் படைப்பில் கன்னட மொழியில் உருவான யூடர்ன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இதை தொடர்ந்து தமிழில் விக்ரம்வேதா,  இவன் தந்திரன்,  நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்து புகழாரம் பெற்றுள்ளார்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் நடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது கருத்துகளை கூறும்போது,  நடிகை ஒருவர் திருமணமான பிறகு தொடர்ந்து நடிப்பாரா? என்று அவரை சார்ந்த ஒருவரே சிறிதும் தயக்கமின்றி மிகவும் அலட்சியமாக கேட்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன் ஒரு நடிகைக்கு இருக்கும் ஆசைகள், கனவுகள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகு ஏன் இருக்க கூடாது? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிகர்கள் நடிப்பது குறித்து எவ்வித விமர்சனமும் வருவதில்லை. அவர்கள் நடிக்கும் காட்சிகளில் தான் நடிகைகளும் நடிக்கின்றனர். ஆனால் திருமணமான நடிகைகளிடம் கேட்கும் கேள்விகளை ஏன் திருமணமான நடிகர்களிடம் கேட்பதில்லை.  அவர்கள் படத்தில் காதல் காட்சிகளில் நடிப்பதில்லையா?  அல்லது ரொமான்ஸ் செய்யவில்லையா? என்றும் கூறியுள்ளார். அனைவரும் திருமணமான நடிகைகளிடம் இதுபோன்ற பல்வேறு கேள்விகளை சிறிதும் தயக்கமின்றி கேட்பது எனக்கு மிகவும் கோபமாக உள்ளது. அதேசமயத்தில் சிறிதும் சிந்திக்க வைக்கிறது.இது பற்றி மக்கள் கருத்துக்கள் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |