Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சட்டவிரோதமாக செய்த செயல்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி காவல் நிலையத்திற்கு, பூச்சியனேந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் பெட்டி கடை அருகே நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் பூச்சியனேந்தல் கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.2,270 மற்றும் 21 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகேசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |