மெக்சிகோவில் கொள்ளை கும்பலுகளுக்குள் ஏற்பட்ட தகராறில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை/கொலை கும்பல்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் fresnillo பகுதியில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 10 பேரின் உடல்கள் சாலையில் கிடந்துள்ளது. இதனை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.