ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் கமல்ஹாசன் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் ரசிகர்கள் தன்னை பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென பின்னாடியிருந்து வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அதே டெய்லர்.. அதே வாடகையா என விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோலவே மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதே விளம்பர உத்தியை கமல் செய்துள்ளதால் அவரை விமர்சித்து வருகின்றனர்.
https://twitter.com/ragulshiv/status/1529046115005255680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1529046115005255680%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fvikram-movie-promotions-netizens-troll-kamal-haasan%2Farticleshow%2F91809873.cms