Categories
தேசிய செய்திகள்

இதையும் குறைக்க வேண்டும்… மத்திய அரசுக்கு மேகனா காந்தி வலியறுத்தல்….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.5 மற்றும் ரூ.10 என்று குறைத்துள்ளது. அதனைப் போலவே மற்ற மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் பா.ஜ.க சுல்தான்பூர் தொகுதி எம்.பி. மேனகா காந்தி நேற்று தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது போலவே சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இதனிடையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.13 மற்றும் ரூ.14 என்று உயர்த்தியது. இதனை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கிய உணவு தானியங்களை அடுத்த மார்ச் வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |