Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கலையா!…. வேட்டையாடி சாப்பிட்ட முதியவர்…. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!!

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்டு விட்டதாகவும், மருந்து மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காக அதன் உடல் பாகங்களை காயவைத்து விற்பனை செய்ய இருப்பதாகவும் முத்தன் தெரிவித்தார். அதன்பின் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்படி, வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் முத்தனை கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்து உரிமையில்லாத நாட்டுத்துப்பாக்கி, தோட்டா, அரிவாள், அந்த பூனையின் உடல் பாகங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |