Categories
உலக செய்திகள்

இதையெல்லாமா சமைப்பாங்க…? ஜோராக நடக்கும் தொப்புள்கொடி உணவு விற்பனை…. மருத்துவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை…!!

சீனாவில் சட்ட விரோதமாக தொப்புள் கொடி விற்பனை நடப்பது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீன சுகாதாரத்துறை கடந்த 2005 ஆம் ஆண்டு தொப்புள் கொடியை  விற்பனை செய்வது சட்ட விரோதமான செயல் என்று அறிவித்திருந்தது. ஆனால் சீன அரசாங்கம் தொப்புள் கொடி விற்பனை செய்வது குறித்து எந்த ஒரு சட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. இதனால் அங்கு தொப்புள்கொடி விற்பனை செய்வது அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1,30,000 தொப்புள் கொடிகளை சேகரித்து விற்பனை செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்த தொப்புள் கொடியில் காசநோய் மற்றும் இனப்பெருக்கம் போன்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதால் சீன மக்கள் அதனை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கழிவு ஆலைகளில் இருந்து தொப்புள் கொடியை வாங்கி அதனை சமைத்தோ அல்லது பொடி செய்தோ இணையதளத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக நடைபெறும் இந்தத் தொப்புள்கொடி விற்பனையானது சீனாவில் உள்ள முக்கிய பகுதியான போஜோ, பிஷோ, யோங்செங் ஆகிய இடங்களில் தான் அதிகம் நடைபெறுகின்றது.

இதனிடையே மருத்துவர்கள் தொப்புள் கொடியை சமைப்பதால் மட்டும் அதிலுள்ள கிருமிகளை அழிக்க முடியாது, அதற்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் முறையைப் பின்பற்றியே முழுவதுமாக கிருமிகளை தொப்புள் கொடியிலிருந்து அழிக்க முடியும், எனவே தாங்கள் தொப்புள் கொடிகளை வாங்கி சமைத்து உண்பதால் தங்களுக்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |