தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையானது தீவிரப்படுத்த பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் டெல்லி சென்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் மோடியை சந்தித்து பேசினர்.
இதற்கு பிறகும் கூட அதிமுகவினர் மீதான ரெய்டுகள் நிறுத்தாதன் காரணமாக தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இதில் அதிமுகவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், திமுக அமைச்சர்களின் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் உள்ளனர். மேலும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு திமுகவின் அட்டூழியங்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த சந்திப்பில் ஓ பன்னீர்செல்வம் உடல்நிலை சரியில்லாத காரணமாக பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு தமிழக ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுகவின் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.