Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் உயிரோட விற்குறாங்க..! வனத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்..!!

பெரம்பலூரில் வனவிலங்குகளை உயிருடன் விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் உயிருடன் பிடித்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்புரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வனவிலங்குகள் உயிருடன் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயிருடன் இருந்த நாளில் 4 கானாங்கோழிகள், 7 முயல்கள், ஒரு காட்டுப் பூனை, 4 புனுகு பூனைகள், ஒரு கவுதாரி ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சேலம் மாவட்டம் அயோத்திபட்டினம் குப்பமேடு பகுதியில் வசித்து வரும் துரை, எஜமான், அதே பகுதியில் வசித்து வரும் கந்தசாமி அவரது மகன்கள் அச்சம் பரமசிவன், அச்சம் ஆகியோர் வனவிலங்குகளை உயிருடன் பிடித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து வன உயிரின சட்டத்தின் கீழ் வனத் துறையினர் வழக்குப்பதிந்து அச்சம் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான எஜமான், பரமசிவன், துரை ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுவாச்சூர் வனக்காப்பு காட்டில் உயிருடன் மீட்கப்பட்ட வனவிலங்குகள் விடப்பட்டது.

Categories

Tech |