சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது.
கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும், மேலும் ஓட்டல்களில் மக்கள் அதிக அளவில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கக்கூடாது, சமூக இடைவெளி இல்லாமல் வர்த்தக நிறுவனங்களில் நின்றால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார். மேலும் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தான் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் வழங்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.