திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணிகள் ஏறியுள்ளனரா ? என்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ஹோட்டல்கள், கடைகள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு வருபவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். முக கவசம் அணியாமல் மார்க்கெட் செல்லும் வழியில் நடந்து வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து ரூ. 7,500 பழனி பகுதியில் முக கவசம் அணியாத பொதுமக்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.