அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.23,85,700 ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவரித்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தவிதமான ஆவணங்களும் எனது இல்லத்தில் கைப்பற்றப்படவில்லை. எனவே இதனை நான் சட்ட ரீதியாக கையாள்வேன்”என்று கூறினார். இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டு அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதில், “அதிமுக நிர்வாகிகள் மீது சுமத்தப்படும் அவதூறு வழக்குகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். மேலும் தற்பொழுது நடைபெற்றுள்ள ஊரக தேர்தல் நேர்மையாக நடைபெற்றதா”என்று கேள்வி எழுப்பினார்.