Categories
மாநில செய்திகள்

இதையெல்லாம் பின்பற்றினால் மட்டுமே…. பட்டாசு கடை வைக்க அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடையை அமைப்பதற்கான முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதுபோல மொத்தம் 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |