Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் மீறிட்டாங்க… செயல் அலுவலரின் அதிரடியால்… மூடப்பட்ட பயிற்சி மையம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொரோனா விதிமுறையை மீறிய தனியார் பயிற்சி நிலையத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள தையல் தொழிற் பயிற்சி நிலையம் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து செயல் அலுவலர் கவிதா தாசில்தார் அந்தோணிராஜ் அறிவுறுத்தலின் பேரில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று கொரோனா விதிமுறையை மீறியதற்காக பயிற்சி நிலையத்திற்கு அபராதம் விதித்துள்ளார். மேலும் பயிற்சி நிலையத்தை மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டது.

Categories

Tech |