Categories
மாநில செய்திகள்

“இதை அரசே கொள்முதல் செய்யணும்”…. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…!!!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “தமிழகத்தில் தேங்காய், வருடம் முழுவதும் உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகக்கூடிய தேங்காயில் 75 % கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தஞ்சை, பட்டுக்கோட்டை, சேலம், ஈரோடு, பல்லடம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தேங்காய் உற்பத்தியாகிறது. கொப்பரை தேங்காய்யை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வாயிலாகவும், கிராம கூட்டறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்கிறது. இதை வருடம் முழுதும் கொள்முதல் செய்வதில்லை.

அத்துடன் தற்போது தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயின் விலை மிகவும் சரிந்திருக்கிறது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.150-க்கும், உரித்த தேங்காய் கிலோ 1க்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணையை வழங்க அரசு முன்வர வேண்டும். மேலும் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காயின் விலை ரூ.12ல் இருந்து 8 ரூபாய்கு குறைந்து உள்ளது. இந்த விலை குறைவு விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. மத்திய அரசின் பாமாயில் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் வரி இல்லா இறக்குமதியே காரணம் என கூறப்படுகிறது. தென்னை விவசாயிகள் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை அரசே வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |