உடல் எடை குறைப்பதற்கான சிறந்த டிப்ஸ் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
பெரும்பாலானோர் அதிகமான உடல் எடையை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் எளிதான ஒரு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். மேலும் இதை குடித்தால் சாப்பிட்டது போல வயிறு நிறைவாக இருக்கும். அதோடு மலச்சிக்கல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.