தே.மு.தி.க. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வைத்து தே.மு.தி.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் துணை செயலாளர் ராஜசந்திரசேகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டில்லி சுவாமிநாதன், மாநகர செயலாளர் நந்தகுமார், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.