தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வைத்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் கருணாநிதி, ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் முருகையன் , அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்துள்ளனர்.