வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பான் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகளுக்கு இது முக்கியமாக பயன்படுகின்றது. வங்கிகளில் பணம் போட, கணக்கு தொடங்க, அசையா சொத்துக்களை வாங்க, விற்க போன்றவற்றிற்கு பான் கார்டு அவசியம் என்பதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் எண் கட்டாயமாக பயன்படும். வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கு பான் எண் பயன்படுவதால் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது .
மேலும் இணைக்கப்படாத வங்கி கணக்கில் இருந்து பணம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, ஏடிஎம்மில் பணம் எடுப்பது போன்ற செயல்களை செய்ய முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. பான் எண் இணைக்க நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மூலமாகவே வங்கிகளில் எண்ணை இணைக்க முடியும்.
முதலில் எந்த வங்கியில் பான் எண்ணை இணைக்க விரும்புகிறீர்களோ அந்த வங்கியின் வெப்சைட்டிற்கு சென்று service request என்ற பிரிவில் update pan card என்ற வசதியில் பான் எண்ணை பதிவு செய்யலாம். அதில் பான் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களைப் கொடுத்து அனைத்தையும் சரிபார்த்த பின்னர் submit கொடுத்தால் பான் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.