அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் இருப்பு வைக்கவில்லை என்றால் கணக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அளவு தொகையை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் நிலுவையில் வைத்திருப்பது கட்டாயம். இல்லாவிட்டால் 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி பராமரிப்பு கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும்.
இந்த தொகை உங்கள் கணக்குகளில் இருந்து கழிக்கப்படும். கணக்கு இருப்பு பூச்சியமாக இருந்தால் கணக்கு தானாக மூடப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக தங்களது வங்கி கணக்கின் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.