Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை உடனே பண்ணுங்க…. அவ்வளவுதான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க…. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், திமுக அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல்.

அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை கட்டாயம் வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். எரிபொருட்களின் விலையை குறைக்கும் வரை அதிமுக போராட்டம் நடத்தும்.மாநில அரசும் வரியை குறைத்து இவற்றின் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |