Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மீன்பிடி தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன்பிடி தொழிலாளி பாலத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் பகுதியில் வசித்து வந்த மீன்பிடி தொழிலாளியான பூம்பாண்டி சம்பவத்தன்று அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்திலிருந்து தவறி விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |