ஆப்கானிஸ்தானில் எரிபொருள் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஷகார்தாரா மாவட்டத்தில் உள்ள குவாலா இ முராட் பேக் என்ற பகுதியில் எரிபொருளை ஏற்றி நின்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அந்த தீ அருகில் இருந்த மற்ற லாரிகளுக்கும் பரவ தொடங்கியது. அதில் டிரக்குகள், எரிபொருள் லாரிகள், கார்கள் என பல வாகனங்களும் தீயில் எரிந்தன.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவைகளும் எரிந்ந்தன. இந்த பயங்கர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.