Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியலயே… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை இளையான்குடி அருகே தீராத வயிற்று வலியினால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அயன்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்தார். இவர் தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்காததால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் திவ்யா எலி பேஸ்ட் விஷமருந்தை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் அவரது தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |