Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை எல்லாத்தையும் ஒன்னா வச்சாச்சு இனி எண்ண வேண்டியதுதான் பாக்கி…. மொத்தம் 5 தொகுதி…. நெல்லையில் மண்டல அலுவலர்….!!

நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல அதிகாரிகள் வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதியிலிருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வாக்கினை போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இதனையடுத்து வாக்கு பதிவு நேரம் முடிந்தவுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்கு போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து எந்திரங்களையும் சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வாக்கு சாவடிகளுக்கு வந்த மண்டல அலுவலர் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளை வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிக்கொண்டு வாக்குப்பதிவு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயர் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |