Categories
தேசிய செய்திகள்

இதை ஏன் இன்னும் தாங்கி பிடிக்கிறீர்கள்…? இனியும் இதை அனுமதிக்கலாமா…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு இந்த சட்டத்தை கடை பிடிப்பது ஏன்?

மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை தண்டிப்பதற்காக பிரிட்டிஷ் கொண்டுவந்த தேசத் துரோகச் சட்டம் விடுதலை பெற்ற பின் இப்போதும் ஏன் வைத்திருக்கிறீர்கள்? இதை ஏன் தாங்கிப் பிடிக்கிறீர்கள். தேச துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்கள் என்று பார்த்தால் எண்ணிக்கை மிக குறைவு. காவல்துறையால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகின்றது. இதை இனியும் அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆராய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |