Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை ஏன் வீட்டுல வைக்கணும்..? சாலையோரம் கொட்டிய அவலம்… கிராம மக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூர் ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரசியை வழங்குவதால் அவற்றை கிராம மக்கள் சாலையோரம் கொட்டியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடை புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய், அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி கடந்த ஆறு மாதங்களாக வண்டுகள் புழுக்கள் நிறைந்து தரமற்றதாக உள்ளது. இதனால் அந்த அரிசியை வாங்கி சிலர் வீட்டில் எதற்கு வைக்க வேண்டும் என்று சாலையோரம் வீணாகக் கொட்டியுள்ளனர். மேலும் அவர்கள் எளிய மற்றும் நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களின் நலன் கருதி ரேஷன் கடை மூலம் எருக்கூர் கிராம மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |