Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த வேண்டும்..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தினமும் 125 பேருக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவிய நாள் முதல் இன்று வரை 136 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

எனவே அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, பழைய அரசு தலைமை மருத்துவமனை, அமராவதிபுதூர் காச நோய் பிரிவு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |