சிவகங்கை மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காளையார்கோவில் வாரச்சந்தை வாசல் அருகே நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வாரச்சந்தை வாசல் அருகே காளையார்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தலைவர் தெய்வீக சேவியர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ராமநாதன், செயலாளர் அலெக்சாண்டர் துரை, துணை தலைவர் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு 1000 பயனாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். அந்த கபசுர குடிநீரை காஞ்சிப்பட்டியை சேர்ந்த சித்த வைத்தியர் பன்னீர்செல்வம் தயார் செய்து கொடுத்தார். மேலும் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.