Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை கேட்டோம் குடுக்கல…! கூட்டுறவு சங்க அலுவலகத்தில்… விவசாயிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் நகைக்கடன், பயிர்கடன் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ரசீதை காண்பித்து நேற்று முன்தினம் பெரிய கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை திரும்பத் தருமாறு கேட்டனர்.

ஆனால் நகைகள் விவசாயிகளுக்கு திரும்ப வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |